தமிழ்ராக்கர்ஸ் இணையதளங்களை முடக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் வெளியாகியதும் இணையதளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் பதிவு செய்யபட்டுள்ள இணைய முகவரிகளை முடக்குவதற்கு மத்திய தொலைத் தொடர்பு துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.