தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் இந்திய அழகி

இந்திய அழகியாக தேர்வு செய்யப்படுகிறவர்கள் உடனடியாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து விடுகின்றனர். அந்த வரிசையில், கடந்த ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் அனுகீர்த்திவாஸ். இவர் நடிகர் பிரசாந்த் நடிக்கும் ‘சேலஞ்ஜ்’ படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘சாக்லேட்’ படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.