தமிழ் திரைப்பட உலகில் நடக்கும் நிகழ்வுகளை அனைத்தும் புள்ளி விவரங்கள் அடங்கிய கையேடு துளசி சினிமா நியூஸ்.   

    தமிழ் திரைப்பட உலகில் புகழ் பெற்ற திரைப்பட மக்கள் தொடர்பாளர் மறைந்த மாமேதை   உயர்திரு பிலிம் நியூஸ் ஆனந்தன் ஜயா அவர்கள் வழியில்…. பிரபல திரைப்பட மக்கள் தொடர்பாளர் உயர்திரு.பெரு.துளசி பழனிவேல் அவர்கள் ஏ.வி.எம் நிறுவனத்தின் அஸ்தான மக்கள் தொடர்பாளர் ஆக .இருந்து வருகிறார்

”துளசி சினிமா நியூஸ்” என்ற வருடாந்திர புத்தகம ஒன்றை மிக சிறப்பாக நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு வருட ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை  திரையுலகில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மற்றும் ஆண்டு முழுவதும் வெளியாகும் தமிழ்த் திரைப் படங்கள் டப்பிங் திரைப்படங்கள் போன்றவைகளை மிகவும் சிறப்பாகவும் புள்ளி விவரங்களோடு தயாரித்து வெளியிட்டு வருகிறார். இதுவரையில் பல இதழ்களை வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது வெளிவந்திருக்கும்  இதழில் 2018-ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் வெளியான திரைப் படங்களின் புள்ளி விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தமிழ் திரை உலகில்  நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் கைக்குள் அடக்கி ஒரு இதழ் வடிவத்தில்   சிறப்பாக வெளிவந்துள்ளது.

உயர்திரு.பெருதுளசி பழனிவேல் அவர்கள்  நிருபராக எழுத ஆரம்பித்து, ஏ.வி.எம் . போன்ற நிறுவனம் களின் மக்கள் தொடர்பாளராக வளர்ந்து, தற்போதைய மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவி யில் இருந்து வருகிறார்

 சினிமாவின் அனைத்து தகவல்களையும் சேகரிக்கும்நடமாடும் தகவல் சேவை மையம்’ என்று பெயர் எடுத்திருப்பது தமிழ் சினிமாவுக்குப் மிக்க பெருமை சேர்த்துள்ளார்  நமது மக்கள் தொடர்பாளர் பெரு.துளசி பழனிவேல் அவர்கள்