தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 
 
அதில் சமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் திரைப்படதின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகில் மூத்த கலைஞரான நடிகர் திரு.ராதாரவி அவர்கள் குறிப்பிட்டு அத்திரைப்படத்தின் கதாநாயகியான செல்வி.நயன்தாரா அவர்களை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியும் மேலும் மற்ற நடிகைகளையும் கொச்சை படுத்துவதுபோல் ரெட்டை வசன அர்த்ததுடன் பேசியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. திரு.ராதாரவி திரைத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தும் சக கலைஞரை தகாத வார்த்தைகளால் பேசுவது ஒட்டுமொத்த துறைத்துறைக்கும் மற்ற மூத்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது.
திரைத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் திரு.ராதா ரவி அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில், கைதட்டலுக்காக இது போன்ற கொச்சையான பேச்சுக்களை பேசி வருகிறார். அது திறைத்துரை மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் அவரது மேன்மையை குறைப்பது மட்டுமல்லாமல் திரு.ராதா ரவி மேல் உள்ள மதிப்பையும் மரியாதையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி திறைத்துயின்மேல் மக்களுக்கு நம்பிக்கையை சீரழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயலுக்காக நடிகர் திரு.ராதாரவி அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.