தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கலைப்புலி எஸ் தாணுவின் 3வது அணியாக களம் இறங்குகிறார்கள்.

தமிழ் திரைப்பட உள்ள பல சங்கங்கள் இருந்தாலும் எல்லாராலும் முக்கியமாக கவனிக்கப்படும் சங்கங்கள் இரண்டு.

ஒன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. மற்றொன்று தென்னிந்திய நடிகர் சங்கம்.

தற்போது இவையிரண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது.

இந்த இரண்டு சங்கத்திலும் நடிகர் விஷால் அணியே பதவியே இருந்தது.

இவரால் ஏற்பட்ட நிர்வாக பிரச்சினையாலும் பல மோதல்களாலும் தற்போது இந்த இரண்டு சங்கத்தையும் தமிழக அரசே நடத்தி வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடந்து கிட்டதட்ட 10 மாதங்கள் ஆன போதிலும் இதுவரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

அதாவது வருகிற ஜூன் 21ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் 2 அணிகள் மோதுவதாக அறிவித்துள்ளன.
அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணியினரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர்.

தற்போது பதவி காலத்தில் உள்ள. விஷால் அணி போட்டியிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக கலைப்புலி ஏஸ் தாணு தலைமையில் ஒரு அணி களத்தில் இறங்கியுள்ளது.

இதில் எஸ்.பிக்சர்ஸ் பாலாஜி, சிவாஜி பிலிம்ஸ் குமார், பாலு, ரங்கநாதன் உட்பட பலரும் இணைந்துள்ளனர்.

இந்த அணிக்கு பல மூத்த தயாரிப்பாளர்களும் ஆதரவு இருக்கும் என சொல்லப்படுகிறது.

அப்போ விஷால் அணியினர்:?