தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நிவாரண உதவிகளை குவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு் நன்றி நன்றி

ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வறுமையில் இருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி செய்த நிலையில் தற்போது தமிழ் நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்பட நிவாரண பொருட்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பியுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அன்பிற்கும்‌ பாசத்திற்கும்‌ உரிய ரஜினிகாந்த் சார்‌ அவர்களுக்கு,

இன்றைய கோவிட்‌ 19 வைரஸ்‌ எதிர்ப்பில்‌ தொழில்‌ இன்றி வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும்‌ உங்கள்‌ கலைக்குடும்பம்பத்தின்‌ இயக்குநர்கள்‌ சங்க உறுப்பினர்களுக்கு தாங்கள்‌ இன்று அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள்‌ கிடைக்கப்பெற்றோம்‌.

குறிப்பறிந்து, கேட்காமலே, உங்கள்‌ கலைக்குடும்ப சகோதரர்களுக்கு வாரி வழங்கும்‌ தங்கள்‌ கொடையுள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள்‌ இல்லை. போற்றுகிறோம்‌. தங்கள்‌ நலமும்‌ புகழும்‌ உயரட்டும்‌ குடும்பம்‌ நீடூழி வாழட்டும்‌…

தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தினர் எந்தவித உதவியும் கேட்காமலேயே உதவி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது