தமிழ் நாட்டை விட ஆந்திராவில் அதிகம் சம்பாதிக்கும் ‘ராட்சசன்

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் அக்டோபரில் வெளிவந்த படம் ‘ராட்சசன்’. இந்தப் படம் தமிழில் வெற்றிப் படமாக அமைந்தது. 

படத்தின் தெலுங்கு உரிமையும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. தெலுங்கில் ‘ராட்சசடு’ என்ற பெயரில் படத்தை ரீமேக் செய்து முடித்துள்ளார்கள். விஷ்ணு விஷால் நடித்த கதாபாத்திரத்தில் பெல்லம் கொண்டா சாய் சீனிவாஸ், அமலா பால் கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்கள்.
இப்படம் தமிழில் வசூலித்ததைவிட தெலுங்கில் வெளியீட்டிற்கு முன்பாகவே அதிகம் சம்பாதித்துவிட்டது. படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை மட்டும் 12 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். சாட்டிலைட் டிவி உரிமை 6 கோடிக்கு முன்னணி டிவி ஒன்று வாங்கியுள்ளதாம். அடுத்த மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் வியாபாரம் தெலுங்குத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.