தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தரர்களுக்கும் இடையே இருக்கும் பணப்பிரச்சனையால் ’ஆடை’ படம் வெளியாவதில் சிக்கல்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்து இன்று வெளியாக இருந்த ‘ஆடை’. இப்படத்தினை ‘V’ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் போஸ்டரில் ஆரம்பித்து டீசர், ட்ரெய்லர் என அனைத்திலும் சர்ச்சை தான். காரணம் ஆடை தான். ஆடை படத்தில் ஆடை இல்லாமல் அமலா பால் தோன்றியது தான் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இன்று படம் வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தரர்களுக்கும் இடையே இருக்கும் பணப்பிரச்சனையால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று, பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு மாலை முதல் படம் திரைக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.