தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு
இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சாஹோ. 2017ல் துவங்கப்பட்ட இந்த படம் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் வெள்ளித்திரையில் தோன்றும் திரைப்படம். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மிக பிரமாண்டமான அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளையும், இதற்கு முன் பார்த்திராத கதைக்களத்தை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.
தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும்போது, “நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம். மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.
ஒட்டு மொத்த இந்திய தேசமும் ரசிக்கும் நடிகரான பிரபாஸ் நடித்துள்ள சாஹோ மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளசர்மா என மிகச்சிறந்த நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் மனநிலையை இந்த தாமதம் ஏன் தடுத்து விட போகிறது.
இந்த அறிவிப்பு, ஸ்ரத்தா மற்றும், பிரபாஸின் மாயாஜாலம் நிரம்பிய, இந்த மிகச்சிறந்த அதிரடி நிறைந்த திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்க எல்லோரையும் மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.