தர்பார்’ புகைப்படங்கள் விவகாரம் – படக்குழுவுடன் மாணவர்கள் மோதல்
‘ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த செய்தி தயாரிப்பு நிறுவனத்திற்கு, இயக்குநருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபலமான கல்லூரி வளாகத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. அந்த கல்லூரி மாணவர்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அலைபேசியில் படம் எடுக்க விடாமல் தடுக்க பாதுகாவலர்களை படக்குழு நியமித்துள்ளது. இந்நிலையில், படக்குழுவினருக்கு மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், படக்குழுவினர் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு தளத்தை மாற்றவும் திட்டமிட்டுள்ளனர்.
வெளியாகும் புகைப்படங்கள் : சூட்டிங் ஸ்பாட்டை மாற்ற திட்டம் #darbar #rajinikanth https://t.co/FhRyEYfR2D pic.twitter.com/IhR0cLd19F
— Dinamalar Cinema (@dinamalarcinema) May 1, 2019