தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் ‘க்’*
தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுத்து – இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.
ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், உருவாகும் ‘க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
யோகேஷ் (அறிமுகம்)
அனிகா விக்ரமன்
குரு சோமசுந்தரம்
ஆடுகளம் நரேன் மற்றும் பலர்
தயாரிப்பு: தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன்
கதை-திரைகதை வசனம் இயக்கம்: பாபு தமிழ்
நிர்வாக தயாரிப்பு: பினு ராம்
ஒளிப்பதிவு: ராதாகிருஷ்ணன்
படத்தொகுப்பு: ராகுல்
இசை: அவினாஷ் கவாஸ்கர்
கலை: கல்லை தேவா
சண்டை பயிற்சி: ஃபயர் கார்த்திக்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்