தல 60 படத்தை முடித்துவிட்டு மீண்டும் ரீமேக் படத்தில் அஜித்குமார்

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் கடந்த மாதம் வெளியானது. இது ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்.

இப்படத்தில் பெண் உரிமைக்காக போராடும் வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார் அஜித். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து அஜித் நடிக்கவுள்ள தல 60 படத்தையும் வினோத்தே இயக்க போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் அஜித்.

இந்த நிலையில் அஜித்தின் தல 61 படத்தின் தகவல்களும் கிடைத்துள்ளன.

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் அஜித்.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய படம் ஆர்டிகள்- 15 படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ரீமேக் உரிமையும் போனி கபூரே வாங்கியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.