தளபதி நடிகர் விஜய் அளவுக்கு எனக்கும் சம்பளம் கொடுங்கள்! காமெடி நடிகரின் டிவீட்டால் சர்ச்சை!

தளபதி நடிகர் விஜய் அளவுக்கு சம்பளம் கொடுத்தால் தானும் நிறைய நன்கொடை கொடுப்பேன் என்பது போல நகைச்சுவை நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை ஓரளவுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக தளபதி நடிகர் விஜய் 1.3 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

மேலும் தமிழகத்துக்கு 50 லட்சமும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கேரளா அகியவற்றுக்கும் தலா 5 லட்சம் அளித்தார். இந்நிலையில் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி தளபதி நடிகர் விஜய் போல மற்ற நடிகர்களும் பாண்டிச்சேரிக்கு நிதி அளிக்க வேண்டும் எனக் கூறி நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

அந்த வீடியோவைப் பகிரிந்த நகைச்சுவை நடிகர் கருணாகரன் ‘same salary please’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது தளபதி நடிகர் விஜய் போல எனக்கும் சம்பளம் கொடுத்தால் நானும் கொடுப்பேன் எனக் கூறுவது போல தெரிவித்து இருந்தார். இது தளபதி நடிகர் விஜய் ரசிகர்களைக் கோபப் படுத்தியுள்ளது.