தளபதி விஜய்யின் அடுத்த 65 படத்தை நான் இயக்கவில்லை – இயக்குனர் ரமணா

தளபதி விஜய் நடிப்பில் ‘பிகில் ‘தற்போது தயாராகி வருகிறது. இதையடுத்து அவரது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இதையடுத்து அவரது 65 ஆவது படத்தை இயக்க இயக்குனர் பேரரசு ஒப்பந்தமாகியிருப்பதாகவும் மேலும் இயக்குனர் ரமணாவும் அவரை வைத்து படம் இயக்க முயற்சிகள் மேற்கொண்டு இருப்பதாகவும் ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இயக்குனர் ரமணா அறிக்கை ஒன்றை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “என் தனிப்பட்ட நலனில் நல்லது நடக்க நினைக்கும் தினத்தந்தி நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஆனால், அச்செய்தியில் துளியும் உண்மையில்லை என்பதும், நான் நாளிதழ் நிருபரிடமோ அல்லது வேறு எந்த ஒரு பொது ஊடகத்திலோ அப்படி ஒருபொழுதும் கூறவில்லை என்பதையும், நான் தற்போது நடிகர் தளபதி திரு. விஜய் அவர்களை வைத்து படம் இயக்குவதற்கான எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இப்பதிவின் மூலம் ஊடகங்களுக்கும், பொது உலகிற்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.