தளபதி விஜய்யின் மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

பிரபல நடிகர் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வவைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் உப்பெனா.

இதில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை புச்சி பாபு சனா என்பவர் இயக்கியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படம் இன்னும் தெலுங்கில் வெளியாகவில்ல்லை.

ஆனால் அதற்குள் இந்த திரைப்படத்தை தமிழில் இந்த கதையை மொழி மாற்றம் செய்யவிருக்கிறாராம் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

தமிழ் ரீமேக்கில் நடிகர் தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சித்து செய்து வருகிறாராம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

இது தொடர்பாக தளபதி விஜய்யிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் புச்சி பாபுவே தமிழிலும் இயக்கவிருக்கிறாராம்.

கனடா நாட்டில் ஃபிலிம் மேக்கிங் படித்து வருகிறார் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.

இவரே சில குறும்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகக்து.