தளபதி விஜய் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு சேலஞ்ச் ஆனால் தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம். – நடிகர் விவேக்.

ஓரிரு தினங்களுக்கு முன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தனது வீட்டில் மரக்கன்றை நட்டார்.

அத்துடன் கிரீன் இந்தியா சேலஞ்சை அவர் தளபதி நடிகர் விஜய் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்தார்.

இந்த சேலஞ்சை ஏற்று கொண்ட தளபதி நடிகர் விஜய் தனது வீட்டின் தோட்டத்தில் தானே மண்வெட்டி குழி தோண்டி செடி நட்டார். இந்த படங்கள் வைரலானது.

தற்போது நடிகை ஸ்ருதிஹாசனும் இந்த சவாலை ஏற்று மரக்கன்றை நட்டுள்ளார்.

அவர் நடிகர் ராணா பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகை தமன்னா ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தளபதி நடிகர் விஜய் மகேஷ் பாபு குறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:…

விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்குமே மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்கு நல்லது செய்யும்போது ரசிகர்களும் அவர்களால் தூண்டப்பட்டு நல்லது செய்வார்கள்.

இதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம்.

நமது நோக்கம் ஒரு பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என்பதுதான்’ என விவேக் அதில் பதிவிட்டுள்ளார்.