Thursday, December 9
Shadow

தளபதி விஜய் படங்களிலே ‘பிகில்’ ஒரு ட்ரேட் மார்க் படம்!

தெறி – மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக இணைந்து விஜயின் 63 வது படமான “பிகில்” படத்தில் இயக்கி வருகிறார்.

தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு – விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் பிகில் படம் உருவாகிக்கொண்டிருக்கிறது

.தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் . மேலும் இவர்களுடன் நடிகர் விவேக் , ஜாக்கி ஷெரஃப், கதிர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தளபதி விஜய் அவர்களின் மற்ற திரைப்படங்களில் இருந்து பிகில் படம் தனித்து காணப்படும். மாஸ், ஸ்டைல், ஆக்‌ஷன் என ரசிகர்கள் கொண்டாடும்படியாக உருவாகி வருவதாக படக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது .

CLOSE
CLOSE