தளபதி-63 படத்தின் தமிழ்நாடு ரைட்ஸை வாங்கிய முன்னணி நிறுவனம், பிரமாண்ட வியாபாரம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக தளபதி-63 உருவாகி வருகின்றது. இப்படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

தற்போது அட்லீ படத்தின் பாடல்கள் வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றார், இப்படத்திற்கு ரகுமான் தான் இசையமைப்பாளர்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு ரைட்ஸை வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான சில்வர் ஸ்கிரீன் வாங்கியுள்ளதாக ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

அது மட்டுமின்றி இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிக தொகைக்கு வாங்கியுள்ளது தளபதி-63 தானாம்.