தளபதி 63′ படத்தில் இணைந்த மற்றொரு நடிகை

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்காக சென்னை அருகே பிரமாண்டமான கால்பந்து மைதான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ‘மேயாத மான்’ நாயகி இந்துஜா இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இவர் நடிக்கவுள்ளதாகவும். இவருடைய காட்சி சம்பந்தமான படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.