தளபதி 63′ படத்தில் நடிப்பது குறித்து நகைச்சுவை பிரபலம் விவேக்

‘நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் கதிர், விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் ‘குருவி’ படத்திற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது குறித்து நகைச்சுவை நடிகர் விவேக் பேட்டி அளித்துள்ளார்.