தளபதி 64′ திரைப்படத்தில் நடிகர் சாந்தனு!?

பிகில்’ படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ‘தளபதி 64’ என தலைப்பிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி இணைந்திருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், நடிகர் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.