தளபதி 64′ படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கவுள்ளது. இதில் கதாநாயகியாக மாளவிகா மேனன் மற்றும் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ராமேஸ்வரத்தில் படமாக்கப்படவுள்ளதாகவும் அதற்கான இடத்தை ராமேஸ்வரத்தில் அவர் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ராமேஸ்வரத்தில் புகைப்படமும் வெளியாகியுள்ளது.