தவமாய் தவமிருந்து இரண்டாம் பாகத்தில் இணையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் சேரன்.

தவமாய் தவமிருந்து இரண்டாம் பாகத்தில் இணையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் சேரன்

இயக்குனர் சேரனின் படைப்புகளான பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், ஆட்டோகிராப், வெற்றிகொடிகட்டு, தவமாய் தவமிருந்து, உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை தமிழ் திரைப்பட உலகிற்கு தந்தவர் இயக்குனர் சேரன்.

அதன் பின்னர் இவரே திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கவும் செய்தார்.

அண்மையில் வெளியான திருமணம் என்ற திரைப்படத்தை இயக்கி அதிலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதன் பின்னர் விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் இயக்குனர் சேரன்.

அந்த நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார் இயக்குனர் சேரன்.

இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காக தான் எழுதிய கதை எவ்வாறு இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.

இப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது

தவமாய் தவமிருந்து போன்ற ஒரு நல்ல படைப்புக்காக தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களோடு இணையும் திரைப்படத்திற்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க போகும் திரைப்படம் வழி விடுமா காலம்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் சேரன்.

இந்தப் பதிவில் இது தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.