தாய்மையை கொண்டாடும் பிரபல நடிகை

நடிகர் ஆர்யா நடிப்பில் வந்த ‘மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாயிட்டோ என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் எமி குழந்தை உதைப்பது தெரிவதாகவும், தனது உடல் எடை பருமன் அதிகரிப்பதாகவும் கூறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் எல்லாமே தாய்மை அடைவதில் நடக்கும் என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.