திமுகவிற்கு ஆதரவாக கரு.பழனியப்பன் பிரச்சாரம் குறித்து கஸ்தூரி

திமுகவிற்கு ஆதரவாக கரு.பழனியப்பன் பிரச்சாரம் குறித்து கஸ்தூரி

இயக்குனர் கரு.பழனியப்பன் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்ச்சித்து வந்தார். மேலும் இவரது விமர்ச்சனத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆளாகியது. இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென திமுக தூத்துகுடி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக கரு.பழனியப்பன் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில், கரு.பழனியப்பன் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “கடைசியில கரு பழனியப்பன் திமுகவா…. நான் கூட சிவப்பு சிந்தனையாளர், சு.வெ க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்… ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல. குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல் !” என்று பதிவிட்டுள்ளார்.