திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் க.அன்பழகன்

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், “தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.