திரில்லர் இணைய தொடரில் நடிக்கும் பிரபல நடிகை.

நடிகைகள் பலர் தற்போது இணைய தொடரில் நடித்து வரும் நிலையில், தற்போது ஹன்சிகாவும் ஒரு இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

‘மஹா’ படத்தை அடுத்து கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தநிலையில் தற்போது அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ படத்தை இயக்கிய அசோக் இயக்கும் இணைய தொடரில் நடிக்க உள்ளார் ஹன்சிகா. ‘மஹா’ படத்தைப்போலவே இந்த தொடரும் திரில்லர் கதையில் உருவாகிறது.