திருப்பதி ஏழுமலையானை நடந்தே சென்று வழிபட்ட பிரபல நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ வெற்றிக்கு நன்றி தெரிவிக்கவும், ‘மஜிலி’ திரைப்படம் வெற்றிபெற வேண்டியும் நடிகை சமந்தா, கீழிருந்து மேல் திருப்பதி வரை சுமார் 8 கி.மீ வரை நடந்தே சென்று ஏழுமையானை வழிபாடு செய்துள்ளார்.