திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரையில் இணையும் சூர்யா – ஜோதிகா ஜோடி

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பின்னணி பணிகள் முடிவடைந்து வருகின்ற 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது, இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ட்விட்டரில் ரசிகர்களின் கேளிவிக்கு சூர்யா பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் “மீண்டும் மனைவி ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பீர்களா என ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் சூர்யா “அப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. பொருத்தமான, சிறப்பான கதை கேட்டு வருகிறோம். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என நம்புகிறேன்” என பதிலளித்துள்ளார்.