திரைக்கு வர தயாராகும் பிரபல இயக்குனரின் திரைப்படங்கள் !*

பிரபல இயக்குனர் ஆர்.கண்ணன் தற்போது நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் ஒரு திரைப்படத்தையும் நடிகர் அதர்வா நடித்து வரும் ஒரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த சூழ்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டது.

இதனை வருகின்ற பிப்ரவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதே போல், நடிகர் அதர்வா, நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் இன்னொரு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த படமும் விரைவில் திரையிட தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.