திரையுலகில் தீயசக்திகள்..; விஜய்சேதுபதியை கைது செய்ய எச் ராஜா மாநில அரசுக்கு வலியிறுத்தல்.

நம்ம ஊரு ஹீரோ என்பது ஜனவரி 20, 2019 முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு உரையாடல் நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சியை பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி
தொகுத்து வழங்குகிறார்

நடிகர் விஜய் சேதுபதி நடத்தும் நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சி சன் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நம்ம ஊரு ஹீரோ என்ற சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி அப்போது ஒரு குட்டி கதை ஒன்றை சொன்னார்.

“சாமிக்கு அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடிவிடுவார்கள். அப்போது ஏன் துணி போட்டு மறைத்துவிட்டார்கள் என்று குழந்தை தாத்தாவிடம் கேட்டது.

அதற்கு தாத்தா, குளித்து முடித்த சாமி இப்போது உடைமாற்றப் போகிறது என்றார்.

உடனே அந்தக் குழந்தை என்ன தாத்தா குளித்ததையே காட்டினார்கள். ஆனால் உடை மாற்றுவதை மூடிவிட்டார்கள்” என்று பேசினார் நடிகர் விஜய்சேதுபதி.

இதனையடுத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது பல புகார்கள் கூறப்பட்டன.

காவல் துறையில் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது என்பதையும் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் பாஜகவை சோர்ந்த தேசிய செயலாளர் எச். ராஜா தன் ட்விட்டரில் நடிகர் விஜய்சேதுபதியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.

அதில்…. தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் தீயசக்திகளின் எண்ணிக்கை திரையுலகில் அதிகரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்துமத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

என பதிவிட்டுள்ளார்.