திரையுலகில் வந்து 35 ஆண்டை நிறைவு செய்த பிரபலம்

கடந்த 1984ம் ஆண்டு டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான ‘உறவை காத்த கிளி’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக களமிறங்கிய பிரபலம் சிம்பு. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று அவர் திரையுலக பயணத்தின் 35 ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். இதனை முன்னிட்டு சிம்பு ரசிகர்கள் சுமார் 500 அடி நீளத்திற்கு போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள்.