தீர்ப்புகள் விற்கப்படும்: படத்தில் மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ்
இந்தியில் வெளியான மாம் படத்தில் நடிகை ஸ்ரீதேவி தன் மகளுக்கு நேர்ந்த ஒரு கொடுமைக்காக பழிக்குப்பழி வாங்குவார். அதை அப்படியே திருப்பி போட்டு உருவாகும் படம்தான் தீர்ப்புகள் விற்கப்படும். இதில் மகள் ஸ்மிருதி வெங்கட்டுக்கு நடக்கும் ஒரு கொடுமைக்காக அப்பா சத்யராஜ் பழிவாங்கும் கதை.
படத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட்டுடன், மயில்சாமியின் இளைய மகன் யுவா, ஹரிஷ் உத்தமன், சார்லி, மதுசூதனன், ரேணுகா, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.என்.பிரசாத் இசை அமைக்கிறார், அன்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் சத்யராஜ் மருத்துவ கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். மெடிக்கல் ஏரியாவில் நடக்கும் மிகப்பெரிய கொடுமையை எதிர்த்து போராடுகிறார். இதுகுறித்து இயக்குனர் தீரன் கூறியிருப்பதாவது:
இது அப்பா பழிவாங்குற கதை. இதுமாதிரி இந்தியில் சில படங்கள் வந்திருக்கிறது. 60 வயது ஹீரோ பழிவாங்குகிற கதை. ஹீரோயின் ஸ்மிருதியை சுற்றித்தான் கதை நடக்கும், அவரது ஜோடியாக மயில்சாமி மகன் யுவா நடித்திருக்கிறார். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது. என்றார்