துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கினை நீக்கி விட்டு விஷாலே இயக்க திட்டம்.?

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துப்பறிவாளன்’.

இயக்குனர் மிஷ்கின் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகர் வினய் வில்லனாக மிரட்டியிருந்தார்.

இதில் நடிகர் விஷாலின் கணியன் பூங்குன்றன் கேரக்டர் பலரின் பாராட்டையும் பெற்றது.

தற்போது துப்பறிவாளன் திரைப்படத்தின்
இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கியுள்ளது.

இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் இப்பட பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமானதால் இயக்குனர் மிஷ்கினை இந்த திரைப்படத்திலிருந்து நீக்கி விட்டு நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலே இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.