தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது?

தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக 61 பேர் அளித்த புகாரில் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில். நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியது.

இந்நிலையில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர்  சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பெயரில் உரிய விளக்கம் அளிக்கக்கோரி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதாவது விதிகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தென்னிந்தியா சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது ஆகையால். சங்கத் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது