தென்னிந்தியா நடிகர் சங்க பொதுச் செயலாளர் பல பெண்களை ஏமாற்றி வாழ்க்கையை சீரழித்தவர் – ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தரும் வகையில் நடிகர் சங்க செயலாளர் விஷால் மீது பரபரப்பான பாலியல்  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளா

சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு தமிழ் திரையுலகில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி. இவர் தன்னை ஏமாற்றியதாக கூறி அரை நிர்வாண போரட்டம் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இவரது குற்றச்சாட்டுகளால் திரையுலகமே அதிர்ந்தது. சிலர் இவருக்கு பட வாய்ப்பு அளித்தனர். தெலுங்கு மட்டுமல்லாது, தமிழ் திரையுலகிலும் ராகவா லாரன்ஸ், ஏ ஆர் முருகதாஸ் முதலானவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ஶ்ரீரெட்டி.

தற்போது நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் விஷால் பற்றி கூறியுள்ளதாவது, விஷால் நீங்கள் பல பெண்களை ஏமாற்றியுள்ளது எனக்குத் தெரியும்.

நீங்கள் உண்மையாகவே யாரையும் ஏமாற்றவில்லை என்றால் நிரூபியுங்கள் பார்க்கலாம். விஷால் ஒரு ஏமாற்று பேர்வழி. என் அம்மாவின் மீதும், என் தொழிலின் மீதும் சத்தியம் செய்து சொல்கிறேன்.

நீங்கள் என் வாழ்வை அழித்தாலும் சரி. என்னைக் கொன்றாலும் சரி. அப்போதும் சொல்வேன் நீங்கள் ஏமாற்றுக்காரர். விஷால் படத்தில் நடிப்பதற்காக பல பெண்கள் அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நீங்கள் பணம் கொடுத்து பெண்களிடம் உறவு வைத்துக் கொள்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு யார் பெண்களை சப்ளை செய்கிறார்கள் என்பதும் தெரியும் என்று அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார்.

விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஷால் மீதான இந்தக் குற்றச்சாட்டு பெரும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது. இதற்கு விஷால் தரப்பில் இருந்து, இதுவரை எந்த பதிலும் வரவில்லை.