தென்னிந்தியா நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் – இறுதி முடிவை அறிவித்தது நீதிமன்றம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது.

இதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. மேலும் இது தொடர்பாக தென்னிந்திய
நடிகர் சங்கம் சார்பில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

இந்நிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தேர்தலுக்கு தடை கோரியும், தேர்தலை ரத்து செய்ய கோரியும் மனுத்தாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமீன் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்

என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து கால அவகாசம் கோரி வருவதாகவும், வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி வழங்ககோரியும் வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்று ஏழுமலை, பெஞ்சமீன் தரப்பில் வாதங்களை முன் வைத்தாலும், வைக்கவிட்டாலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.