தென்னிந்தியா நடிகர்  சங்க தேர்தலில் நான் போட்டியிடவில்லை : நடிகை ராதிகா

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 23ம் தேதி நடக்கும் இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியே மீண்டும் களமிறங்க உள்ளது. இவர்களை எதிர்த்து மற்றுறொரு அணி உருவாக இருக்கிறது.

கடந்த தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக இருந்த ஆர்கே.சுரேஷ், உதயா போன்றவர்கள் இந்தமுறை அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். இதனால் இவர்கள் ஒரு அணியாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த அணியில் நடிகை ராதிகாவை களமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ராதிகா போட்டியிடவில்லை என கூறிவிட்டார்.

ராதிகா கூறுகையில், நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை. படப்பிடிப்பில் பிஸியாக உள்ளேன், தேர்தலில் போட்டியிட நேரம் கிடையாது. தேர்தல் நடக்கும் அன்றைய தேதியில் நான் ஊரிலும் இருக்க மாட்டேன். யாரோ தேவையில்லாமல் வதந்தியை கிளப்பி உள்ளார்கள். நான் தேர்தலில் நிற்கபோவதில்லை என உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்