தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்

 
பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான திரு.மகேந்திரன் (வயது79) அவர்கள் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்!
 
பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான திரு.மகேந்திரன் (வயது 79) அவர்கள் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்  இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, அவர்களது மறைவு அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. 
திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி வாழ்க்கையில் பல நல்ல எதார்த்ததுடன் கூடிய பரிமாற்றங்களை காட்டமுடியும் என்று தனக்கு பின்னால் வந்த இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் திரு.மகேந்திரன் அவர்கள். 
திரைப்படங்களான உதிரிப்பூக்கக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற அவருடைய படைப்புகள் தமிழ் சினிமாவின் வரலாற்று சுவடுகள். தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்து புகழின் உச்சி அடைந்தார். அவரது மறைவு திரையுலகத்திற்கு ஈடு கட்ட இயலாத இழப்பாகும்.
“அன்னாரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்திக்கிறோம்”