தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நில மோசடி வழக்கு சரத்குமார் ராதாரவி ஆஜராக சம்மன்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக சங்கத்தின் பணத்தில் இருந்து சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில் 26 செண்ட் நிலம் வாங்கப்பட்டது.
இந்த நிலத்தை சங்கத்தின் ஒப்புதல் இன்றி முறைகேடாக அப்போதைய தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் இருவரும் சேர்ந்து விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் பெரும் தொகையை இருவரும் சேர்ந்துசேர்ந்து மோசடி செய்யப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டது. தலைவர் நாசர் அதற்கான ஆவணங்களை அனைத்தையும் ஒப்படைத்தார்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதாரவி மீது நிலமோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது படப்பிடிப்பு இருப்பதால் இன்னொரு நாளில் ஆஜராவதாக கூறி விஷால் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்யவும், குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கவும், வருகிற 20ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.