தென்னிந்திய நடிகர் சங்க விவகாரம் – தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு ❗*

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தனி அதிகாரியாக பத்திரப்பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்தும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி இன்றே விசாரிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் வழக்கை மற்றொரு ⚖நீதிபதி ஏற்கனவே விசாரித்து வருவதால் இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் முறையிட கூறி வழக்கை நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.