தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு! யார் யார் போட்டியிடவுள்ளனர், லிஸ்ட் இதோ
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது தேர்தலை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமன முடிவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான அவசர ஆலோசனை செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைவர் நாசர், மற்றும் விஷால் ,குட்டி பத்மினி, கார்த்தி போன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என இன்று (மே.28) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஒய்வு பெற்ற நீதிபதியுமான பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியில் ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாசர் தலைவர் பதவிக்கும், கருணாஸ் துணை தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.