தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய பிரபலம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. 4 மாடிகளை கொண்ட இந்த கட்டிட பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் ஆடிட்டோரியம், 1000 பேர் அமரும் கல்யாண மண்டபம், அலுவலகம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை அமைத்து உள்ளனர். இதற்கு இதுவரை ரூ.30 கோடிக்கு மேல் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்டுமான பணிக்கு பணம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடியும், விஷால் ரூ.25 லட்சமும் வழங்கி உள்ளனர்.