தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் கார்த்தியை எதிர்த்து களமிறங்கும் பிரசாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பாக்யராஜ் அணி சார்பில் போட்டியிடுபவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருப்பவர்கள் பலர் எங்கள் அணியில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். எங்கள் அணியில் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் நிற்கிறார்” என்று கூறினார். மேலும் பாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.