தென் கொரியாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே’. இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் ‘காலா’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கு ட்விட்டர் நிறுவனம் இமோஜி ஒன்றை வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் தென் கொரியாவில் திரையிடப்படவுள்ளது. இதன் மூலம் தென் கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை இந்த படம் பெறுகிறது.