தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்கும் – நடிகர் அரவிந்த் சாமி

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இந்த படத்தில் சைரா நரசிம்ம ரெட்டியாக நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ளார். நாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என ஒரே சமயத்தில் நான்கு மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழ் டப்பிங்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்க அரவிந்த் சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.