தெலுங்கு திரைப்படமான புஷ்பா திரைப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
தெலுங்கு திரைப்படமான புஷ்பா திரைப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அதே சமயத்தில் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
மலையாளம், தெலுங்கு என பட்டைய கிளப்பி வரும் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.
இதில் வனத்துறை அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்சேதுபதி விலகிக்கொண்டதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் பாபி சிம்ஹா அந்த கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறதாம்.
இதில் தமிழர்களை செம்மர கடத்தல்காரர்களாக காட்டப்படுவதை நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி விரும்பவில்லை என்றும் அதனால் விலகியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.