தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நடிகர் சூர்யாவின் மகன் வெற்றி பெற்றார

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தியா, தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர். பெற்றொர்கள் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தாலும், தியா மற்றும் தேவ் படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்து வருகின்றனர். சூர்யாவின் மகள் தியா, கால் பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மகன் தேவ் தற்காப்பு கலையான கராத்தேவில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார். தனது மகன் கலந்துகொள்ளும் இந்த போட்டியைக் காண சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.