தேர்தல் ஆணையம் உரிய பதில் கூற வேண்டும்’-தினகரன் பேட்டி
தேர்தல் ஆணையம் உரிய பதில் கூற வேண்டும்’-தினகரன் பேட்டி
சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர்,”எங்களது கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை .மக்கள், கட்சிக்காரர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 முகவர்கள் இருக்கின்றனர். அவர்களின் வாக்குகள் கூடவா அமமுகவிற்கு விழவில்லை⁉. இதற்கு காரணம் என்னவென்று போகப் போக தெரியும். இந்த விவகாரத்தில் நாங்கள் நீதிமன்றத்தை நாட முடியாது. ஆனால் இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய பதில் கூற வேண்டும்” என்றும், “எங்களுடைய முகவர்கள் ஸ்லீப்பர் செல்கள் கிடையாது. அவர்கள் இன்னும் அமமுகவின் விஸ்வாசுகளாகத் தான் இருக்கிறார்கள். அரசியலில் ஒரே நாளில் எதையும் சாதித்து விட முடியாது. பாஜக மற்றும் அதிமுக வீழ்த்தப்படும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. எங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.