தேர்தல் நேரம் என்பதால் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை-பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையை சிலர் விமர்சிக்கிறார்கள் தேர்தல் நேரம் என்பதால் அந்த வருமான வரி சோதனையை ஆளும் கட்சியுடன் முடிச்சு போடுகிறார்கள். இந்த வருமான வரிசோதனைகள் எல்லாம் சட்டப்படிதான் நடந்துள்ளது. அரசியல் ரீதியாக பழி வாங்கும் வகையில் எந்த வருமான வரி சோதனையும் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “போபால் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பிரக்யா சிங் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார். பயங்கரவாதத்தை மதத்துடனும், கலாச்சாரத்துடனும் இணைத்து பேசுபவர்களுக்கு அவரது தேர்தல் போட்டி நிச்சயம் பதில் அளிப்பதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். “பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 2014ம் ஆண்டு பெற்ற வெற்றியை விட இந்த தடவை கூடுதல் வெற்றி கிடைக்கும். பாரதிய ஜனதா கட்சிக்கு மீண்டும் தனி பெரும்பான்மை கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.